கண்ணாடி மழையில்

கண்ணாடி மழையில் (2015)
பாடியவர்: ஸ்ரேயா கோஷல்
இசை: R.N. வசந்த்
பாடலாசிரியர்: தமயந்தி
இயக்கம்: ராஜராமன் Note that in some cases, the bus images displayed are representative. Please contact the respective bus stands and depots for the most up-to-date bus schedules.

கண்ணாடி மழையில் உன்னைக் காணும் நேரம் தூறலாக
என் நாடி எங்கும் யுத்தம் செய்யும் மேகம் சாரலாக
தீராத காற்றாகவா
உன் ராக்கால பாட்டாகவா
ஈர சாலை ஓரம் நீரிலாடும் நுரையில்
உந்தன் பெயரை எழுதவா

கண்ணாடி மழையில் உன்னைக் காணும் நேரம் தூறலாக
என் நாடி எங்கும் யுத்தம் செய்யும் மேகம் சாரலாக

மழையின் துளியை உலறாமல் இதழின் நுனியில் சிலையாக
வடித்து தருகிறேன் உனக்கென
நிலவின் நிழலில் விளையாட களவும் அங்கு கை மீற
முழுதும் தருகிறேன் உயிர்வரை
இரவினில் நடுமார்பினில் சாய்ந்தாடியே
முதுகினில் ஒரு வரி எழுதிடுவேன்
கனவினில் நீ சிரிக்கையில் தலைக் கோதியே
இமையினில் என் இதழ் பதித்திடுவேன்
காதலாலே நானே மோகத்தீயில்
கப்பம் கட்டி வெப்பம் சேர்க்கவா

கண்ணாடி மழையில் உன்னைக் காணும் நேரம் தூறலாக
என் நாடி எங்கும் யுத்தம் செய்யும் மேகம் சாரலாக

இதயம் நடுவில் வழிந்தோடும் இசையின் தடயம் நீயாக
குளிர்ந்து வெடிக்கிறேன் அனுதினம்
முழுதும் முடிந்த இரவொன்றில் உன்னைச் சேரும் வரவொன்றில்
சிலிர்த்து துளிக்கிறேன் உயிர்வரை
நிஜமென ஒரு நகல் மனதினில் போரிட
புலங்களும் என்னில் தாயங்கள் போட
திடுமென ஒரு வரம் நடுவினில் தோன்றிட
நடு நரம்பினில் பூகம்பம் திரள
யாதுமாகி நின்றாய் உன்னில் நானும்
ஏழு ஜென்மம் இன்று வாழவா

கண்ணாடி மழையில் உன்னைக் காணும் நேரம் தூறலாக
என் நாடி எங்கும் யுத்தம் செய்யும் மேகம் சாரலாக
தீராத காற்றாகவா
உன் ராக்கால பாட்டாகவா
ஈர சாலை ஓரம் நீரிலாடும் நுரையில்
உந்தன் பெயரை எழுதவா

[youtube=http://youtu.be/oIz2PXqKt4g]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*