படித்ததில் பிடித்தது | மாமரம் | கவிதைகள்

புறவழிச்சாலையின் மகிழுந்துப் பயணத்தினிடையே இளைப்பாற
நீங்கள் பழச்சாறு அருந்த தேர்ந்தெடுத்த
இவ்விடத்தில் ஒரு மாமரம் இருந்தது
இன்று அதன் கதை மட்டுமே
எஞ்சி இருக்கிறது Note that in some cases, the bus images displayed are representative. Please contact the respective bus stands and depots for the most up-to-date bus schedules.

அறுவடை முடிந்த நிலத்திலிருந்து
வைக்கோல் தாட்களாலான பிரியை
தன் மனைவி துணையுடன்
திரித்தான் விவசாயி ஒருவன்

குடிசையருகே நிழல் விரித்த மாவின்
தாழ்ந்த கிளையில்
அப்பிரியால் ஊஞ்சலமைத்தான்

சற்றருகே முன்னிரவு ஈன்ற கிடாரிக்கன்றை
வாஞ்சையுடன் நக்கிக்கொடுத்தது செம்பசு

பள்ளிவிட்டுதிரும்பிய அவன் மகள்
தன் சிறுபாவாடை குடை விரிய
ஊஞ்சலாடி சிறு பாதங்களால்
ஆகாயம் தொட்டு மகிழ்ந்தாள்

எளிய இசைவியக்கத்தில் பசு
அம்மாவென கத்தி ஆனந்தித்தது

எளியோர் விதி இதுதானே
பொக்கென ஓர் கணத்தில்
போகத் தொலைந்தது மகிழ்வு
மாவின் நிழல் விழுங்கி
நீண்டது இத்தார்ச் சாலை

பின்னோர் நாள் நிலத்தே கதியற்றுக் கிடந்த
இப்பிரியில்தான் தொங்கினான்
அவ்விவசாயி

அவன் பசு சூல் கொண்ட காலத்தே
தந்தையின் நிழலையும் இழந்தாள் சிறுமி
அவள் செம்பசு கத்திக் கொண்டே இருந்தது

உங்கள் பழச்சாற்றை கசப்பாகவும் வெம்மையாகவும் மாற்றிய
மா மற்றும் உழவனின்
ஆவியலைவதுதான்
நீங்கள் பயணிக்கும்
இப்புறவழிச்சாலை நண்பரே!

— கரிகாலன்

Last Updated on February 24, 2021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*