Tag Archives: படித்ததில் பிடித்த வரிகள்

படித்ததில் பிடித்தது | கலைக்கூத்தாடி பெண் | கவிதைகள்

கலைக்கூத்தாடி பெண்

இரு கரங்களிலும் கோல்தாங்கி கயிற்றில் நடந்தவள் கலவரமாய் இறங்கிக் காதோடு முணுமுணுக்கிறாள்.. விழிகளில் பரவசம்மின்ன விழுந்த சில்லறைகளைப் பூச்சரமாக்குகிறாள் தாய்… “இனி பொழப்புக்கு எங்கே போறது?” முகத்தில் சலிப்போடு மூட்டை கட்டுகிறான் அவன்.

Read More »

படித்ததில் பிடித்தது | அப்பா | கவிதைகள்

படித்ததில் பிடித்தது – 12 அப்பா

சின்ன வயதில் செய்த தவறுகளுக்கெல்லாம் பூச்சாண்டியாய் உன் பெயரைத்தான் சொன்னாள் அம்மா காலையில் கணக்குப் பாடம் குழம்பியபோது பத்திரிகையில் புதைந்த உன் தியானத்தை எப்பிடிக் கலைப்பது? விடுமுறை நாள்களில் சினிமாவுக்குப் போக அம்மாவைத் தூதுவிடுவதே ஆபத்தற்றதாய் இருந்தது வாரம் ஒருமுறை பின் ...

Read More »

படித்ததில் பிடித்தது – 12 [தார்ச்சாலை]

படித்ததில் பிடித்தது - தார்ச்சாலை

காட்டுக் கோழியைத் துரத்தி வந்த பூனை திகைக்க வழித்தடம் மறிபட்டு யானை ஒதுங்க வலசை கிளம்பிய கதிர்குருவி தடுமாற காட்டின் நெஞ்சைக் கீறிக் கீறி எழுகிறது ஒரு தார்ச்சாலை…

Read More »

படித்ததில் பிடித்தது – 11 [உயிர் முத்தம்]

விளையாட்டாய் விழி முடி அமர்கிறேன் என்ன தருவாளென்று கண்ணிமைக்கும் நேரத்தில் மடியில் தலைசாய்த்து எனைத் தாங்கி உயிர் முத்தம் தருகிறாள் …

Read More »

படித்ததில் பிடித்தது – 10 [பூக்களைப் பாருங்கள் புரியும்!]

படித்ததில் பிடித்தது – 10 [பூக்களைப் பாருங்கள் புரியும்!]

பூக்களைப் பாருங்கள் புரியும்! பூக்கள் ஒரு போதும் புலம்புவதில்லை! ஜன்னம்- சகதியில் நிகழந்தாலும் முட்களுக்கு இடையே மோதலில் பிறந்தாலும் பூக்கள் ஒரு போதும் புலம்புவதில்லை! தரிசனம் தந்து கவலை மறக்க்க கற்றுத்தரும் ஞானிகள் – மலர்கள்! ’பெறுவதைவிடத் தருவதே சுகம்’ இது ...

Read More »

படித்ததில் பிடித்தது – 9 [வாழக்கை]

நேற்று பெய்த அடைமழையில் கலைந்து போயின மேகங்கள் நீலம் கலையாத வானத்தில் தனித்தீவாய் முழுநிலவு நேற்று வரை மனதில் நீங்கா பாரம் இன்று தான் நிமிர்ந்து பார்க்கிறேன் பால் நிலா ஒளியை வாழ்க்கை இன்னும் இருக்கிறது ரசிக்க…

Read More »

படித்ததில் பிடித்தது – 8 [காலை எழுந்ததும் காதல்…]

படித்ததில் பிடித்தது - காலை எழுந்ததும் காதல்...

ஒரு வாழ்த்து மடலுக்கான அட்டையை தேர்ந்தெடுத்தலில் செலவான காலம் சொல்லும் உன் மீதான அன்பை… ஊட்டிவிடுகையில் விரலை கடிக்கவில்லையென்றால்.. அப்புறம் என்ன காதல் அது! எத்தனை பூ யாருக்காக சூடியிருப்பினும் பதிணெண் பருவத்தில் நீ முள்ளின் முனை தாங்கி பறித்து சூட்டிவிட்ட ...

Read More »

படித்ததில் பிடித்தது – 7

படித்ததில் பிடித்தது

கனவு கண்டது போல் கையில் குடையோடு வந்திருந்தாய் உன்னை ஏமாற்ற மனமில்லாமல் இறங்கி வந்தது மழையும். நீர்த் தாரைகளைச் சொடுக்கி உன்னோடு என்னையும் கரைத்துவிடுவது போல் அடைத்துப் பெய்தது அந்த அந்தி மழை. சிரித்துக் கொண்டுபோய் மலர்த்தி நீ பரிசளித்த குடையை ...

Read More »

படித்ததில் பிடித்தது – 6 [மகளெனும் தேவதை]

படித்ததில் பிடித்தது - மகளெனும் தேவதை

தேவதைகள் பூமியில் பிறக்கிறார்கள் – மகளெனும் அடைமொழியோடு. தேவதை என்றால் எப்படி இருப்பாள் என்று கேட்கிறாள் மகள். அவளைப்பற்றி அவளிடமே எப்படி கூறுவது? புரை ஏறும் போது நாம் மெதுவாக தலையில் தட்டினாலும் வேண்டுமென்றெ இன்னொரு முறை இரும்மி தானே தட்டிக்கொள்ளும் ...

Read More »

படித்ததில் பிடித்தது – 5

மயிலிடத்து பறிக்கப்பட்ட இறகின் வண்ணம் கண்டு வியப்பிலாழ்ந்து, தனக்குமொன்று கிடைக்காதாவென்று ஏங்கி கவலை கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில், இறகை இழந்த மயிலின் உணர்வு பற்றி கவலை கொள்வீர்களேயானால், நீங்களும் நானும் நண்பர்கள்!!!

Read More »