Home » LARK » Jinguchaa Tamil Song Lyrics – Thug Life | ஜிங்குச்சா பாடல் வரிகள் – தக் லைப்

Jinguchaa Tamil Song Lyrics – Thug Life | ஜிங்குச்சா பாடல் வரிகள் – தக் லைப்

தக் லைப் – ஜிங்குச்சா தமிழ் பாடல் வரிகள்

படம் : தக் லைப்
பாடியவர்கள் : வைஷாலி சமாண்ட், சக்திஸ்ரீ கோபாலன், அதித்யா RK
பாடலாசிரியர் : கமல்ஹாசான்
இசை : AR ரகுமான்

ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு ஜா..

எங்க சுந்தரவல்லிய
இன்னும் சுந்தரமா ஆக்குங்க
இந்த சக்கரக்கட்டிய
சேத்து பொங்கல் ஆக்குங்க
எங்க கங்க கொடுத்தோம்
உங்க அடுப்பில் சேத்துக்க
உலையில் அறம் பொருள் இன்பம்
மூனையும் சேத்து மூட்டுங்க

ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு ஜா
பந்தலுக்கு ஈசானி மூல
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு ஜா
பக்கமா பள்ளம் பறிச்சாச்சு
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு ஜா
குங்குமமும் மஞ்சளும் சேத்தாச்சு
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு ஜா
மங்களமோ மங்களம் உண்டாச்சு

அப்பனின் கண்மணியாம்
அற்புத பாவை இவள்
நடத்தின சுயம்வரத்தில்
தேர்ந்தவன் என் மகன்தாங்க
தூரத்து சொர்க்கத்தில்
நிச்சயம் செய்யாமல்
கிட்டத்து நட்பிலையே
பிடிச்ச என் கிராகலட்சுமி

ஜிங்கு ஜிங்கு ஜிங்கு சா
பெரிசுங்க சம்மதிச்சு
ஜிங்கு ஜிங்கு ஜிங்கு சா
சம்பந்தம் செய்துட்டி
ஜிங்கு ஜிங்கு ஜிங்கு சா
பிரசவம் முடிஞ்சதும் தான்
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு ஜா
பந்தலுக்கு ஈசானி மூல
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு ஜா
பக்கமா பள்ளம் பறிச்சாச்சு
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு ஜா
குங்குமமும் மஞ்சளும் சேத்தாச்சு
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு ஜா
மங்களமோ மங்களம் உண்டாச்சு

ஒருமையிலே பேரைச்சொல்லி
அடிச்சு வைதவ
பந்தலிலே பணிவு காட்டும்
வேஷம் போடுறா
பல நாளா கனவில் மட்டும்
பாத்த காட்சியை
முதலிரவில் தணிக்கையின்றி
பாக்க போகிறா

அடியே
சிங்காரமாய் சிரிப்பை
அடக்கும் கள்ளி
என் குளத்தில் மட்டும் மலரும்
இந்த அள்ளி
சிறு குண்டு மல்லி போல
பல புள்ள குட்டிய
இவ பெத்து போட போவதெல்லாம்
இங்கேத் தான்

சிக்கிட்ட சிக்கிட்ட சிக்காத காளை
சமையலுக்கு உதவ ஆளு கிடைச்சிட்ட
சம்சாரம் சொன்னதே வேதம்னு ஓதுவான்
பெண்டாட்டி தாசனாவே மாறுவான்

ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு ஜா
ஊருக்குள்ளே வம்பு பண்ணுவான்
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு ஜா
வீட்டுக்குள்ளே சொம்பு தூக்குவான்
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு ஜா
ஊருக்குள்ளே வம்பு பண்ணுவான்
ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு ஜா
வீட்டுக்குள்ளே சொம்பு தூக்குவான்

ஜிங்குச்சா ஜிங்குச்சா
அருந்ததி பார்த்தாச்சா
ஜிங்குச்சா ஜிங்குச்சா
அம்மி மிதிச்சாச்சா
ஜிங்குச்சா ஜிங்குச்சா
மெட்டிய போட்டாச்சா
ஜிங்குச்சா ஜிங்குச்சா
ஏழடி வைச்சாச்சா

வந்த வேலை முடிஞ்சதுங்க
பந்திக்கு முந்துங்க

ஜிங்குச்சா ஜிங்கு ஜிங்கு ஜா

Thug Life – Jinguchaa Tamil Song Lyrics

Album : Thug Life
Singer : Vaishali Samant, Shakthisree Gopalan, Adithya RK
Lyrics : Kamal Hassan
Music : AR Rahman

Jinguchaa jingu jingu jaa..

Enga Sundaravalliya
Innum sundarama aakkunga
Indha sakkarakkattiya
Saethu pongal aakkunga
Enga ganga kuduththom
Unga aduppil saeththukka
Ulaiyila aram porul inbam
Moonaiyum saethu moottunga

Jinguchaa jingu jingu jaa
Pandalukku eesaana moola
Jinguchaa jingu jingu jaa
Pakkamaa pallam parichchaachu
Jinguchaa jingu jingu jaa
Kungumamum manjalum saeththaachu
Jinguchaa jingu jingu jaa
Mangalamoo mangalam undaachu

Appanin kanmaniyaam
Arpudha paavai ival
Nadaththina suyavaratthil
Thernthavan en maganthaanga
Dhooraththu sorggaththil
Nichchayam seiyyaamal
Kittaththu natpilaye
Pidichcha en kiraka Lakshmi

Jingu jingu jingu saa
Perisunga sammathichchu
Jingu jingu jingu saa
Sambandham seyduttti
Jingu jingu jingu saa
Prasavam mudinjadhum thaan

Jinguchaa jingu jingu jaa
Pandalukku eesaana moola
Jinguchaa jingu jingu jaa
Pakkamaa pallam parichchaachu
Jinguchaa jingu jingu jaa
Kungumamum manjalum saeththaachu
Jinguchaa jingu jingu jaa
Mangalamoo mangalam undaachu

Orumaiyile peraichcholli
Adichchu vaiththava
Pandalile panivu kaattum
Vesham poduraa
Pala naalaa kanavil mattum
Paatha kaatchiyai
Mudhal iravil thanikkaiyinri
Paakka pogiraa

Adiye
Singaaramaai sirippai
Adakkum kalli
En kulaththil mattum malarum
Indha alli
Siru kundu malli pola
Pala pulla kuttiya
Iva pethu poda povadhellaam
Ingedhaan

Sikkitta sikkitta sikkadha kaalai
Samayalukku udhava aalu kidaichchitta
Samsaaram sonnadhE vedhamnu oodhuvaan
Pondatti daasanave maaruvaan

Jinguchaa jingu jingu jaa
Oorukkulle vambu pannuvaan
Jinguchaa jingu jingu jaa
Veetukkulle sombu thookkuvaan
Jinguchaa jingu jingu jaa
Oorukkulle vambu pannuvaan
Jinguchaa jingu jingu jaa
Veetukkulle sombu thookkuvaan

Jinguchaa jinguchaa
Arundhathi paaththaachaa
Jinguchaa jinguchaa
Ammi midhichchaachaa
Jinguchaa jinguchaa
Mettiya pottacha
Jinguchaa jinguchaa
Ezhadi vaichchaachaa

Vandha vela mudinjadhunga
Pandhikku mundhunga

Jinguchaa jingu jingu jaa…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*